திருமலை திருப்பதியில் மே 1 முதல் வி.ஐ.பி., தரிசனத்திற்கு கட்டுப்பாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஏப் 2025 10:04
திருப்பதி; திருப்பதி திருமலையில் மே 1 முதல் ஜூலை 15ம் தேதி வரை வி.ஐ.பி.. தரிசனத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறையை முன்னிட்டு திருமலைக்கு வரும் பக்தர்களின் கூட்டம் ஏற்கனவே அதிகரித்துள்ளது. இந்தச் சூழலில், ஸ்ரீவாரி தரிசனத்திற்கு வரும் சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை அளிப்பதன் ஒரு பகுதியாக, மே 01 முதல் ஜூலை 15 வரை நெறிமுறை பிரேக் தரிசனங்களுக்கு தேவஸ்தானம் வி.ஐ.பி.. தரிசனத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மே 01 முதல், ஸ்ரீவாரி தரிசனத்திற்கு வரும் விஐபிக்களுக்கு காலை 6 மணி முதல் சோதனை அடிப்படையில் விஐபி பிரேக் தரிசனங்கள் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.