அவிநாசி; அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழாவை முன்னிட்டு வேலாயுதம்பாளையம் ஊராட்சி, காசி கவுண்டம்புதுார், ராயன் கோவில் காலனி ஸ்ரீ ஆகாசராயர் கோவிலுக்கு குதிரை ஊர்வலம் நடைபெற்றது. கோவில் வளாகத்தில் ஊர் பொது பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியை தொடர்ந்து மைதானத்தில் இருந்து குதிரை மற்றும் வேட்டை வாகனம் புறப்பாடு நடைபெற்றது. ராயர் கோவில் காலனி, அவிநாசி -– மங்கலம் ரோடு, சக்தி நகர் ஆகிய பகுதி வழியாக அலங்கரிக்கப்பட்ட குதிரையை சப்பரத்தில் கட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த ஊர்வலமாக சுமந்து வந்தனர். ஆகாசராயர் கோவிலில் சிறப்பு அலங்கார பூஜை, தீபாராதனை நடைபெற்றது. ராயர் சந்திரன் மற்றும் ராயன் கோவில் காலனி ஊர் பொதுமக்கள் சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.