Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உலக நன்மைக்காக வாழ்க்கையை ... வாசவி ஜெயந்தி; வழிபட வேண்டியது தருவாள்.. வரம் தந்து காப்பாள்.. வாசவி தேவி..! வாசவி ஜெயந்தி; வழிபட வேண்டியது ...
முதல் பக்கம் » துளிகள்
இன்று சஷ்டி விரதம்; முருகனை வழிபட்டு முன்னேற்றம் பெறுவோம்!
எழுத்தின் அளவு:
இன்று சஷ்டி விரதம்; முருகனை வழிபட்டு முன்னேற்றம் பெறுவோம்!

பதிவு செய்த நாள்

03 மே
2025
12:05

முருகப்பெருமான் மும்மூர்த்திகளின் அம்சமான போற்றப்படுகிறார். முருகா என்றால் மும்மூர்த்திகளான அம்சம் பொருந்தியவன் என்று அர்த்தம். முருகனுக்கு எத்தனையோ விழாக்கள் இருந்தாலும் அதில் சிறந்தது சஷ்டி. முனிவர்கள், தேவர்கள் உள்ளிட்ட பலரும் கடைப்பிடித்த விரதம் இது. சஷ்டி விரதம் இருந்தால் முருகனே குழந்தையாக அவதாரம் செய்வார் நம்பிக்கை. ஆறு என்ற எண், முருகப்பெருமானுடன் மிகவும் தொடர்புடையது. அவனது திருமுகங்கள் ஆறு, கார்த்திகை மாதர் அறுவரால் வளர்க்கப்பட்டவன்; அவனது மந்திரம் ஆறெழுத்து - நம:  குமாராய அல்லது சரவண பவ; அவனது இருப்பிடம் அறுபடை வீடுகள், அவனுக்குரிய விரத நாட்களில் சஷ்டி விரதம், மஹா ஸ்கந்த சஷ்டியின் ஆறாம் நாள் சூரசம்ஹாரம் என இப்படியாகப் பல விஷயங்கள் ஆறுமுகனுடன் தொடர்புடையன. சஷ்டி என்பது வளர்பிறை அல்லது தேய்பிறையின் ஆறாம் நாள். இதற்கு சஷ்டி திதி என்று பெயர். இத்திதிக்கு நாயகனாகவும், இத்திதியைக் குறித்த விரதத்துக்கு முக்கிய தெய்வமாகவும் விளங்குபவன் குகப் பெருமான். சுப்ரமண்யருடைய மாலா மந்திரத்தில், சஷ்டி ப்ரியாய என்னும் மந்திரம் இடம் பெறுகிறது. சஷ்டி எனும் திதியில் விருப்பமுள்ளவன் என்றும், சஷ்டிதேவியை விரும்புபவன் என்றும் இதற்குப் பொருள். காலை, மாலை கந்தசஷ்டி கவசம் படிப்பது சகல நன்மையும் தரும். இன்று சஷ்டியில் சண்முகனை வணங்கி சங்கடம் நீங்க பெறுவோம்!

 
மேலும் துளிகள் »
temple news
சிவன் தன் தலையின் இந்த பிறைச்சந்திரனுக்கு இடம் கொடுத்துள்ளார். இன்று சந்திர தரிசனம் செய்வதால் ... மேலும்
 
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
பங்குனி அமாவாசை முன்னோர்கள், குலதெய்வ வழிபாட்டிற்கு உகந்த நாளாகும். தீர்த்தக் கரைகளில் முன்னோருக்கு ... மேலும்
 
temple news
மாதம்தோறும் தேய்பிறை சதுர்த்தசியில் சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. சிவராத்திரி விரதம் இருந்தால் ... மேலும்
 
temple news
உத்தர கன்னடா மாவட்டம் கார்வாரின் அமதள்ளி கிராமத்தில் அமைந்து உள்ளது ஸ்ரீ வீர கணபதி கோவில். பல ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar