பதிவு செய்த நாள்
27
நவ
2026
04:11
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டிசம்பர் 20 முதல் 29-ம் தேதி வரை நடைபெற உள்ள வைகுண்ட துவார தரிசனத்திற்கான டிக்கெட் மற்றும் தரிசன டோக்கன்கள் வெளியிடப்படும் தேதிகளை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதன்படி, நவம்பர் 28-ம் தேதி காலை 10 மணிக்கு ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகளும், நவம்பர் 30-ம் தேதி காலை 10 மணிக்கு ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளும் வெளியிடப்பட உள்ளன.
வைகுண்ட ஏகாதசி, துவாதசி நாட்களான டிசம்பர் 20, 21 ஆகிய தேதிகளில் தரிசனம் செய்வதற்கான ஸ்லாட்டட் சர்வ தரிசன (SSD) டோக்கன்களைப் பெற, டிசம்பர் 1 முதல் 5-ம் தேதி வரை இ-டிப் முறையில் பக்தர்கள் பதிவு செய்யலாம்.
நவம்பர் 28: காலை 10 மணிக்கு ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகள் வெளியீடு.
நவம்பர் 30: காலை 10 மணிக்கு ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் வெளியீடு.
டிசம்பர் 1–5: SSD டோக்கன்களுக்கான இ-டிப் பதிவு. டிசம்பர் 1 காலை 10 மணிக்குத் தொடங்கி, டிசம்பர் 5 மாலை 5 மணிக்கு நிறைவடையும்.
டிசம்பர் 7: பிற்பகல் 3 மணிக்கு இ-டிப் குலுக்கல் மூலம் SSD டோக்கன்கள் ஒதுக்கீடு.
டிசம்பர் 8: காலை 10 மணிக்கு நன்கொடையாளர்களுக்கான தரிசன டிக்கெட் ஒதுக்கீடு வெளியீடு.
டிசம்பர் 20, 21-ல் விஐபி பிரேக் தரிசனம் ரத்து. வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசி நாட்களான டிசம்பர் 20, 21 ஆகிய தேதிகளில் அரசு நெறிமுறைப்படி அனுமதி பெறுபவர்களைத் தவிர, விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சாதாரண பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் ஏழுமலையானைத் தரிசிக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த இரண்டு நாட்களுக்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நாட்களில் SSD டோக்கன்கள் மின்னணு குலுக்கல் (இ-டிப்) முறையில் ஆன்லைனில் ஒதுக்கீடு செய்யப்படும்.
பக்தர்கள் தரிசன டிக்கெட்டுகள் மற்றும் டோக்கன்களை தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://ttdevasthanams.ap.gov.in மூலம் மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.