கீதையை அர்ஜூனனுக்கு உபதேசித்ததால் கிருஷ்ணருக்கு ஜகத்குரு என்ற பட்டம் உண்டு. மனிதனாக அவதரித்து அத்வைத தத்துவத்தை உலகிற்கு அளித்த ஆதிசங்கரருக்கும் ஜகத்குரு என்ற பட்டம் உண்டு. அவருடைய குருநாதர் கோவிந்த பகவத்பாதர். கோவிந்த என்னும் நாமத்தின் மூலம் ஆதிசங்கரர், கிருஷ்ணரையும், தன் குருவான கோவிந்த பகவத்பாதரையும் ஒரே சமயத்தில் போற்றும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொண்டார்.