வாடிப்பட்டி; வாடிப்பட்டி சொக்கையா சுவாமிகள் மடத்தில் குருபூஜை விழா நடந்தது. இதையொட்டி விநாயகர் வழிபாடு, கலச பூஜை, 108 சங்காபிஷேகம், சிறப்பு யாகசாலை பூஜைகள் நடந்தன. சுவாமிக்கு 16 வகை மூலிகைகளால் அபிஷேகம் செய்யப்பட்டது. வரதராஜ பண்டிட் விநாயகர், பாலதண்டாயுதபாணி, சுவாமிக்கு புஷ்ப அலங்கார, அபிஷேகம், தீபாராதனை செய்தார். பஜனை குழுவினர் பக்தி பாடல்கள் பாடினர். கைலாய வாத்தியம் வாசிக்கப்பட்டது. காலை முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை மடத்தின் நிர்வாக தலைவர் மணிகண்டன் உட்பட பலர் செய்தனர்.