பதிவு செய்த நாள்
13
டிச
2012
10:12
மதுரை: தமிழகத்தில் மழை வேண்டி, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நேற்று வருண யாகம் நடந்தது. இந்தாண்டு பருவ மழை பொய்த்ததால், விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பயிர்கள் கருகி வருகின்றன. இதனால், பெரிய கோவில்களில், மழை வேண்டி வருண யாகம் நடத்துமாறு, அரசு அறிவுறுத்தியது. நேற்று, மீனாட்சி அம்மன் கோவில் சுவாமி சன்னிதி அருகே, இதற்கான பூஜை நடந்தது. பட்டர்கள் கூறுகையில், "ஆயிரங்கால் மண்டபம் அருகேயுள்ள நந்தி தொட்டியில், தண்ணீரை நிரப்பி, இப்பூஜை செய்தால், மழை பெய்யும் என்பது ஐதீகம்; ஐந்து ஆண்டுகளுக்கு முன், இப்பூஜை செய்த போது, அடுத்தடுத்த ஆண்டுகளில், தொடர்ச்சியாக மழை பொழிந்தது. அதேபோல், வரும் ஆண்டில் நிச்சயம் மழை பொழியும் என்றனர்.