Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மரகதவல்லிக்கு மணக்கோலம்: மதுரை ... பிளேக் மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவ விழா பிளேக் மாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பூமாரியம்மன் கோவிலில் அடி அளந்து கொடுத்தல் விழா; பக்தர்கள் பக்தி பரவசம்
எழுத்தின் அளவு:
பூமாரியம்மன் கோவிலில் அடி அளந்து கொடுத்தல் விழா; பக்தர்கள் பக்தி பரவசம்

பதிவு செய்த நாள்

08 மே
2025
10:05

பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே வெள்ளைக்கிணறுவில் உள்ள பூ மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் அடி அளந்து கொடுத்தல் வேண்டுதலை நிறைவேற்றினர். இக்கோவிலில் கடந்த, 22ம் தேதி பூச்சாட்டு விழாவும், தொடர்ந்து கம்பம் நடுதல், அம்மனுக்கு மஞ்சள் நீர் அபிஷேகம், பூ மாரியம்மன் பூச்சொரிதல் விழா, வட்டமலை ஆண்டவர் கலைக்குழுவின் சிறப்பு வள்ளி கும்மி நிகழ்ச்சி, சிகரம் கலைக்குழுவின் ஒயிலாட்டம், சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை, 5:30 மணிக்கு அம்மன் திருக்கல்யாணம், தொடர்ந்து அடி அளந்து கொடுத்தல் வேண்டுதல் நடந்தது. இது குறித்து பூ மாரியம்மன் பக்தர்கள் கூறுகையில், பக்தர்களின் வேண்டுகோளை பூ மாரியம்மன் நிறைவேற்றிய பிறகு, பக்தர்கள் தலையில் தண்ணீர் ஊற்றியபடி கையில் வேப்பிலையுடன் ரோட்டில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து, எழுந்து, கோவில் வரை, தொடர்ந்து வருவதே அடி அளந்து கொடுத்தல் எனப்படும் என்றனர். இந்நிகழ்ச்சியில் நேற்று, 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, தங்களுடைய வேண்டுதலை நிறைவேற்றினர். நேற்று மாலை மாவிளக்கு எடுத்தல், ஜமாப் நிகழ்ச்சி, அம்மன் திருவீதி உலா நடந்தது. இன்று காலை, 10:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், நாளை அபிஷேக ஆராதனை தொடர்ந்து அன்னதானம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி ; திருச்சி மாநகரில் வெகுவிமரிசையாக நடந்த பிரசித்திபெற்ற குழுமாயி அம்மன் கோவில் குட்டிக்குடி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் அருகே திருவைரவன்பட்டியில் திருமெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் தேய்பிறை ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 17ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில் இன்று காலை, கொடியேற்றத்துடன் பங்குனி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar