கருமததம்பட்டி; கே.ராயர்பாளையம் பிளேக் மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. கருமத்தம்பட்டி அடுத்த கே.ராயர்பாளையம் கொங்கு மாநகர் பிளேக் மாரியம்மன் கோவிலில், கடந்த, 29 ம்தேதி காலை, பூச்சாட்டுதலுடன் திருக்கல்யாண உற்சவ திருவிழா நடந்தது. நேற்று முன்தினம் மாலை, காப்பு கட்டுதல், அம்மனுக்கு சீர் நகைகள் கொண்டு வருதல் அம்மன் அழைத்தல், திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, மாவிளக்கு பூஜை, பொங்கல் வைத்தல் உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. மதியம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தன. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை, முளைப்பாரி எடுத்தல், திருக்கரகம் கங்கையில் விடுதல் உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. இன்று மஞ்சள் நீர் உற்சவம் நடக்கிறது.நாளை மறு பூஜை நடக்கிறது.