விழுப்புரம் வைகுண்டவாசர் கருட சேவையில் அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மே 2025 08:05
விழுப்புரம்; விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் சுவாமி கருட சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் ஏகாதசியையொட்டி பெருமாளுக்கு நேற்று மாலை 4:00 மணிக்கு சிறப்பு ஆராதனை நடந்தது. தொடர்ந்து, சுவாமி கருட சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 6:00 மணிக்கு தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.