பட்டமங்கலத்தில் குருபெயர்ச்சி விழா; தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12மே 2025 12:05
திருப்புத்தூர்; திருப்புத்தூர் அருகே பட்டமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர், தட்சிணாமூர்த்தி கோயிலில் குருப்பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
குருபகவான் கிழக்கு நோக்கி அமர்ந்திருப்பது இக்கோயிலில் சிறப்பு. இங்கு குருப்பெயர்ச்சிக்கு பக்தர்கள் தட்சிணாமூர்த்தியை தரிசனம் செய்வது வழக்கம். குருப்பெயர்ச்சியை முன்னிட்டு மே 4ல் குருப்பெயர்ச்சி சிறப்பு ேஹாமம் நடந்தது. நேற்று அதிகாலை நடை திறந்து மூலவருக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சந்தனக்காப்பில் மஞ்சள் வஸ்திரம் அணிந்து மூலவர் அருள்பாலித்தார். உற்ஸவர் கற்பக விருட்சத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். காலை 6:30 மணி முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய துவங்கினர். நேற்று மதியம் 1:24 மணிக்கு குருபகவான் ரிஷபத்தில் இருந்து மிதுனம் ராசிக்கு பெயர்ச்சியான நேரத்தில் ராஜகோபுரத்திற்கும், மூலவர் விமானத்திற்கும் சப்தமுக தீபாராதனை நடந்தது.