மக்கள் வெள்ளத்தில் வராகநதி கரையோரம் உலா வந்த கள்ளழகர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12மே 2025 04:05
பெரியகுளம்; கோவிந்தா கோவிந்தா என நாமம் ஒலிக்க பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் மக்கள் வெள்ளத்தில் வலம் வந்தார்.
பெரியகுளத்தில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு வரதராஜப்பெருமாள் கோயிலிலிருந்து உற்ஸவர் வரதராஜப் பெருமாள் கள்ளழகராக குதிரை வாகனத்தில் பச்சைப்பட்டு உடுத்தி புறப்பட்டார். காலை 5:30 மணி முதல் வராகநதி கரையோரம் வடகரை பகுதியில் 21 திருக்கண் மண்டகப்படி அபிஷேகமும், தென்கரையில் 16 திருக்கண் அபிஷேகம் மண்டகப்படிக்கும் சென்றார். பக்தர்கள் கள்ளழகர் மீது தண்ணீரை பீச்சி அடித்தனர். பக்தர்கள் வெள்ளத்தில் கோவிந்தா கோவிந்தா நாமம் ஒலிக்க வெண் கொடையில் சென்றார். கம்பம் ரோடு காளியம்மன் கோயிலில் நடந்த திருக்கண் அபிஷேகத்தில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பங்கேற்றார். சகலவிதமான நன்மைகள் உண்டாகும்: கள்ளழகர் பச்சைப்பட்டு உடுத்தி உலா வந்தது. அனைவருக்கும் அனைத்து விதமான நன்மைகள் உண்டாகும். சகல ஐஸ்வர்யம் கிடைக்கும் என அர்ச்சகர்கள் குழுவினர் தெரிவித்தனர்.