Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மருதுார் அனுமந்தராய சுவாமி கோவிலில் ... கோவை விளையாட்டு மாரியம்மன் - முத்து கருப்பர் கோவிலில் திருக்கல்யாணம் கோவை விளையாட்டு மாரியம்மன் - முத்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் உலக அமைதிக்கு சிறப்பு பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் உலக அமைதிக்கு சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

13 மே
2025
12:05

மேல்மருவத்துார்; மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், சித்ரா பவுர்ணமி விழாவை ஒட்டி, நேற்று அதிகாலை 3:00 மணிக்கு, மங்கள இசையுடன் ஆதிபராசக்தி அம்மனுக்கும், பங்காரு அடிகளார் திருவுருவ சிலைக்கும், சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடந்தது.


தொடர்ந்து, உலக நாடுகளில் பயங்கரவாத செயல்களின்றி, மக்கள் அமைதியுடன் வாழவும், இயற்கை சீற்றம் தணியவும், 1,008 யாக குண்டங்கள் அமைத்து, மஹா வேள்வி பூஜை நடந்தது. இதை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் துவக்கி வைத்தார். இயக்க துணைத் தலைவர்கள் அன்பழகன், செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக, காஞ்சிபுரம் காமகோடி பீடாதிபதி ஜெகத்குரு சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சரியார் வழங்கிய பிரசாதத்தை, ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளாரிடம், சங்கரா கல்லுாரி முதல்வர் வெங்கடேசன் வழங்கினார். தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு இடங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான செவ்வாடை பக்தர்கள் பங்கேற்று, ஆதிபராசக்தி அம்மனை வணங்கினர். பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. யாக குண்டங்கள் மற்றும் வேள்வி பூஜை பொறுப்பை, ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடங்களின் இணைச் செயலர் ராஜேந்திரன் செய்திருந்தார். விழா ஏற்பாடுகளை, தஞ்சாவூர் மாவட்ட ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் வாசன் மற்றும் திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களின், ஆதிபராசக்தி மன்ற சக்திபீட நிர்வாகிகள் செய்திருந்தனர். சித்ரா பவுர்ணமி விழாவை, ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் பங்காரு அடிகளார் முதலில் துவக்கிய போது, மழை பெய்தது. அதன் பின், நேற்று நடந்த சித்ரா பவுர்ணமி விழாவில், மழை பெய்தபோது, பக்தர்கள் வாழ்த்து கோஷங்கள் எழுப்பினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி: திருமலை திருப்பதியில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் இன்று அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 
temple news
சிவபெருமான் நவராத்திரி விரதத்தை கடைப்பிடித்தே, திரிபுர தகனம் செய்தார் என்று புராணங்களில் செய்தி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் தடை மீறி பக்தர்கள் மொபைல்போனில் செல்பி, வீடியோ ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar