திருவாதவூர் திருமறைநாதர் கோயிலில் வைகாசி திருவிழா; முகூர்த்தக்கால் நடப்பட்டது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14மே 2025 03:05
மேலூர்; மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உப கோயிலான திருவாதவூர் திருமறைநாதர் - வேதநாயகி அம்பாள் கோயிலில் வைகாசி திருவிழா மே 31 கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இத் திருவிழாவை முன்னிட்டு இன்று கோயிலில் முகூர்த்தக்கால் ஊன்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருக்கல்யாண மண்டபத்தில்( சலாங்கம்) திருவிழா பத்திரிக்கை வாசிக்கப்பட்டது. இத் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இணை ஆணையர் கிருஷ்ணன், பேஷ்கார் ஜெயபிரகாஷ், கணக்கர் சீனிவாசன் செய்திருந்தனர். இந் நிகழ்ச்சியில் கோயில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.