விளையாட்டு மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாணம்; திரண்ட பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14மே 2025 01:05
கோவை; கோவை ராம்நகர் ராஜாஜி ரோட்டில் உள்ள ஸ்ரீ விளையாட்டு மாரியம்மன் கோவில் 41 வது ஆண்டு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. கடந்த செவ்வாய்க்கிழமை கணபதி ஹோமம், பூ கம்பம் நடுதல் விழா நடந்தது. பின் நடந்த திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண் பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து நேற்று மாலை நடந்த அம்மன் அழைப்பு நிகழ்ச்சியில் பரமேஸ்வரன் சுவாமி சகிதமாக சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த விளையாட்டு மாரியம்மனுக்கு மாங்கல்யம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான கட்டளைதாரர்கள் கலந்து கொண்டனர். அம்மன் திருவீதி உலா முக்கிய வீதிகளில் சென்றது. இன்று மாவிளக்கு பூஜையுடன் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. தினமும் மதியம் பக்தர்களுக்கு கோவில் கமிட்டி சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது.