குன்னூர்; குன்னூர் எடப்பள்ளி சாய்பாபா கோவிலில், தமிழக முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் சுவாமி தரிசனம் செய்து, வழிபாடு நடத்தினார்.
நீலகிரி மாவட்டம், ஊட்டிக்கு, ஐந்து நாள் சுற்றுப்பயணமாக வந்த, தமிழக முதல்வர் ஸ்டாலின், மனைவியுடன் தமிழகம் விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளார். இந்நிலையில், இன்று காலை 11:15 மணியளவில், துர்கா ஸ்டாலின் குன்னூர் எடப்பள்ளி சாய்பாபா தர்மஸ்தலா கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். கோவிலில், விநாயகர், அம்மன் தெய்வங்களுக்கு வழிபாடு நடத்தி கோவிலை வலம் வந்தார். சாய்பாபாவின் முன்புறம் உள்ள சிவலிங்கத்திற்கு, பாலபிஷேகம் செய்து, மலர் தூவி வழிபட்டார். இவருக்கு, சாய்பாபா தர்மஸ்தலா சுவாமினி சக்திமா, சிறிய சாய் சிலைகளை வழங்கினார். இவருடன் நடிகை சரண்யா உட்பட குடும்பத்தினர், பங்கேற்றனர். ஏற்பாடுகளை, குன்னூர் தி.மு.க., நிர்வாகிகள் காளிதாஸ், செல்வம் மற்றும் பலர் செய்திருந்தனர்.