சோளிங்கர்: ராணிப்பேட்டை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற ஆன்மிக தலமான சோளிங்கர் யோக நரசிம்மர் மலைக்கோவிலுக்கு, கடந்தாண்டு ரோப்கார் சேவை துவங்கப்பட்டது. இச்சேவை துவங்கியதும், பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரிக்க துவங்கியுள்ளது.
மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய முடியாத முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், நீண்டகால உடல்நல குறைவால் அவதிப்பட்டு வருவோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தரிசனம் செய்கின்றனர். தற்போது பள்ளி, கல்லுாரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், பலரும் குடும்பத்தினருடன் மலைக்கோவிலுக்கு வந்து செல்கின்றனர். வைகாசி மாதம் முதல் சனிக்கிழமையான நேற்று சுவாமி தரிசனம் செய்ய ஏராளமானோர் வந்திருந்தனர்.