அவிநாசி: அவிநாசி, காசி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகத்துக்காக திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அவிநாசி, கிழக்கு ரத வீதியில் உள்ள காசி விநாயகர் கோவிலில், கடந்த 36 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றது. இதனால், கும்பாபிேஷகம் நடத்த ஹிந்து அறநிலையத்துறை முடிவு செய்தது. இதனையடுத்து, கோவிலில், இரண்டு மாதமாக உள் மற்றும் வெளிப்பிரகாரங்களுக்கு தளம் அமைத்தல், கோபுரம் மற்றும் சிற்பங்களுக்கு வர்ணம் தீட்டுதல், ஷெட் அமைத்தல் ஆகிய திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.
திருப்பணிகள் முடிவுற்று, வரும், 23ம் தேதி, காலை 6.30 மணிக்கு மேல் 7:31 மணிக்குள் மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்காக யாகசாலை அமைக்கும் பணிகள் நாளை துவங்கும் என்று கோவில் தக்கார் சபரீஷ்குமார் தெரிவித்தார். கும்பாபிேஷகத்தை முன்னிட்டு, கிழக்கு ரத வீதி பேரூராட்சி வணிக வளாக வியாபாரிகள் சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.