பதிவு செய்த நாள்
19
மே
2025
10:05
தொண்டாமுத்தூர்; தொண்டாமுத்தூரில் உள்ள மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.
தொண்டாமுத்தூரில் சுமார், 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த, மாரியம்மன் மற்றும் பெரிய விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில், 13 ஆண்டுகளுக்கு பின், கும்பாபிஷேக விழா, கடந்த, 15ம் தேதி, மூத்த பிள்ளையார் வழிபாட்டுடன் துவங்கியது. தொடர்ந்து, நாள்தோறும் வேள்வி பூஜைகள் நடந்தது. நேற்று, அதிகாலை, 5:30 மணிக்கு, நான்காம் கால வேள்வி நடந்தது. காலை, 8:00 மணிக்கு, யாகசாலை மண்டபத்திலிருந்து, தீர்த்த குடங்கள் புறப்பாடு நடந்தது. காலை, 8:25 மணிக்கு, சிவாச்சாரியார்கள் தலைமையில், மங்கள வாத்தியங்கள் முழங்க, விமான கலசங்கள், மாரியம்மன், பெரியவிநாயகர், முருகப்பெருமானுக்கும், மஹா கும்பாபிஷேகம் நடந்தது. இதில், ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அறநிலையத்துறை கமிஷனர் ஸ்ரீதர், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள், அறங்காவலர் குழுவினர் மற்றும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.