Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி ... தொண்டாமுத்தூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம் தொண்டாமுத்தூர் மாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தருமபுரம் ஆதீனத்தில் தங்க பாத குறடுடன், வெள்ளி பல்லக்கில் குருமகா சன்னிதானம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தருமபுரம் ஆதீனத்தில் தங்க பாத குறடுடன், வெள்ளி பல்லக்கில் குருமகா சன்னிதானம்

பதிவு செய்த நாள்

19 மே
2025
10:05

மயிலாடுதுறை; தருமபுரம் ஆதீனத்தில் தங்க பாத குறடுடன், வெள்ளி நாற்காலி பல்லக்கில் குருமகா சன்னிதானம், குரு முகூர்த்தங்கள் மற்றும் கோவில்களுக்கு எழுந்தருளி வழிபாடு செய்யும் பாரம்பரிய நிகழ்ச்சி இன்று காலை நடந்தது.


மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில் 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த தருமபுர ஆதீன மடம் அமைந்துள்ளது. மடத்தில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஞானாம்பிகை உடனுறை ஸ்ரீ ஞானபுரீஸ்வரர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் வைகாசி பெருவிழா கடந்த 9ம் தேதி  கொடியேற்றத்துடன் தொடங்கியது.   தருமபுரம் ஆதீன குரு முதல்வர் குரு  ஞானசம்பந்தரின் குருவான  கயிலை ஞானபிரகாசரின்  குருபூஜை விழா இன்று நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு மடத்தில் சித்தியடைந்த முந்தைய ஆதினங்கள் 15 பேரின் (சமாதி அடைந்த இடத்தில் சிவலிங்கம் அமைக்கப்பட்டு கோயில்கள் உருவாக்கப்பட்ட இடமான)  குரு முகூர்த்தங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு  பாரம்பரியமான முறைப்படி கட்டளை தம்பிரான்கள் புடைசூழ, பல்லாக்கிற்கு முன்னே யானை குதிரை  செல்ல மங்கள வாத்திய இசை முழங்க அடியவர் கூட்டம் பின் செல்ல தங்க பாத குறடுடன், வெள்ளி நாற்காலி பல்லக்கில் தருமபுர ஆதீனம் 27வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் குரு முகூர்த்தத்திற்கு எழுந்தருளி வழிபாடு நடத்தினார். ஒவ்வொரு முகூர்த்தத்திலும் அந்தந்த குருமகா சன்னிதானங்களில்  வாழ்க்கை வரலாறு விளக்கிக் கூறப்பட்டது. தொடர்ந்து ஞானபுரீஸ்வரர் கோவில் , துர்க்கை அம்மன் கோவில்களில் ஆகியவற்றில் வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து திருமடத்தில் சொக்கநாதர் வழிபாடு மற்றும் குருபூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.  பெருவிழாவின் சிகர நிகழ்வாக தருமபுரம் ஆதீன குருமகா சன்னிதானத்தை சிவிகை பல்லக்கில் எழுந்தருளச் செய்து பக்தர்கள் ஆதீனத்தின் நான்கு வீதிகளை வலம் வரும் பட்டிணப்பிரவேசம் நிகழ்வு நாளை இரவு 8 மணிக்கும் மறுநாள் அதிகாலையில் ஞான கொலு காட்சியும் நடைபெற உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. புகழ் பெற்ற பட்டினப்பிரவேச நிகழ்வு ஏற்பாடுகளை பொது மேலாளர் ரங்கராஜன், கோவில்களின் தலைமை கண்காணிப்பாளர் மணி ஆகியோர் தலைமையில் ஆதீன சிப்பந்திகள்  செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூரில் மாத பூசம் தினமான இன்று வள்ளலார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.கடலூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar