பரிக்கல் லட்சுமி நரசிம்மர் கோவில் தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19மே 2025 10:05
உளுந்துார்பேட்டை; பரிக்கல் லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவிலில் தேரோட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த பரிக்கலில் லட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் 6 ஆண்டுகளுக்கு பிரம்மோற்சவம் கடந்த 9ம் தேதி கொடியேற்றுத்துடன் துவங்கியது. தினமும் சிறப்பு அலங்காரத்தில் சாமி வீதியுலா நடந்து வந்தது. முக்கிய விழாவான தேரோட்டம் நேற்று நடந்தது. அதையொட்டி, காலை 7:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பல்வேறு பூஜைகள், தீபாராதனைக்கு பின் தேரோட்டம் துவங்கியது. முக்கிய வீதிகள் வழியாக தேர் வலம் வந்தது. ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு, வடம் பிடித்து இழுத்தனர்.