ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் தாயார் பூச்சாற்றுதல் சேவை; 5ம் நாள் உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19மே 2025 01:05
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் தாயார் பூச்சாற்று உற்சவம், வெளிக்கோடை 5ம்நாளில் சிறப்பு அலங்காரத்தில் தாயார் சேவை சாதித்தார்.
பூலோக வைகுண்டம் எனப்போற்றப்படுவது ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் தாயார் சன்னதியில் கோடை திருநாள் எனப்படும் பூச்சாற்று உற்சவம் 14ம் தேதி தொடங்கியது. வெளிக்கோடை உற்சவத்தின் 5ம் நாளான நேற்று உற்சவர் ரெங்கநாச்சியார் மாலை மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாலை 7 மணிக்கு வெளிக்கோடை மண்டபத்தை அடைந்தார். அங்கு புஷ்பம் சாத்துபடி கண்டருளிய பின் இரவு 8.30 மணிக்கு நாலுகால் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 8.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். வெளிக்கோடை உற்சவத்தையொட்டி தினமும் மாலை 5 மணி முதல் மாலை 6.30 மணிவரையும், இரவு 8 மணிக்கு மேலும் தாயார் சன்னதியில் மூலஸ்தான சேவை கிடையாது.