காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் கும்பாபிஷேக முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19மே 2025 04:05
காரைக்கால்; காரைக்காலில் கைலாசநாதர் கோவிலில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடு நிகழ்ச்சி நடைபெற்றது.
காரைக்கால் பாரதியார் சாடையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுந்தராம்பாள் சமேத ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக திருவிழாவை முன்னிட்டு இன்று முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக பல்வேறு திரவங்களால் முகூர்த்த காலுக்கு மஞ்சள், பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு திரவங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து மகா தீபாரதனை நடைபெற்றது. பின்னர் முகூர்த்தக்கால் பிரகாரம் சுற்றி வந்து கோவில் வளாகத்தில் நடப்பட்டது. இதில் கோவில் தனி அதிகாரி காளிதாசன் மற்றும் கைலாசநாதர் திருப்பணி குழுவினர் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் மேற்கொண்டனர்.