தெங்கால் திரௌபதியம்மன் கோவிலில் தீமிதி விழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19மே 2025 04:05
ராணிப்பேட்டை; தெங்கால் கிராமத்தில் ஸ்ரீ திரௌபதியம்மன் கோவில் தீமிதி விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ராணிப்பேட்டை அடுத்த தெங்கால் கிராம பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா வெகு விமர்சியாக நடைபெற்று வருகிறது. விழாவில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், இன்று தீமிதி உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி, விரதம் இருந்து தீக்குழியில் இறங்கி தங்களது வேண்டுதல்கள் மற்றும் நெர்த்திக்கடனை பக்தியுடன் நிறைவேற்றி வழிபாட்டில் ஈடுபட்டனர். முன்னதாக திரௌபதி அம்மன் சக்தி கரகத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து, பம்பை மேளம் முழுங்க பக்தர்களால் தோள்களில் சுமந்தபடி மூன்று முறை தீமித்து கோவிலை சுற்றி வலம் வந்தனர். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.