பதிவு செய்த நாள்
20
மே
2025
12:05
குன்னுார்; குன்னுார் பழைய அருவங்காடு முத்துமாரியம்மன் கோவிலில், 51வது ஆண்டு திருக்கரக, பூகுண்டம் திருவிழா விமரிசையாக நடந்தது.
குன்னுார் பழைய அருவங்காடு பகுதியில் உள்ள அன்னை முத்துமாரியம்மன் கோவிலில், 51வது ஆண்டு திருக்கரக பூகுண்ட திருவிழா, கடந்த, 15ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, மதுரை வீரன் திருக்கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் கஞ்சி வார்த்தல் நடந்தது. 18ல், அம்மன் கரகங்களுடன், விரதம் இருந்து பக்தர்கள் பூகுண்டம் இறங்கினர். விநாயகர், அம்மன், முனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. முனீஸ்வரர் கோவிலில் இருந்து குழந்தைகள் விளக்கு பூஜையுடன் முத்துபல்லக்கு ஊர்வலம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்னிசை கச்சேரி, வானவேடிக்கை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. வரும் 25ல் மறு பூஜையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர், கிராம மக்கள் செய்துள்ளனர்.