பதிவு செய்த நாள்
21
மே
2025
01:05
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, கரியகாளியம்மன் கோவில் வளாகத்தில், வள்ளிக்கும்மி அரங்கேற்ற நிகழ்ச்சி நடந்தது. கிணத்துக்கடவு, கரியகாளியம்மன் கோவில் வளாகத்தில், பொன்மலை வேலாயுத சுவாமி கலைக்குழு மற்றும் பொள்ளாச்சி, சுப்ரமணியர் கலைக்குழு சார்பில், 81 மற்றும் 82வது வள்ளிக்கும்மி அரங்கேற்ற நிகழ்ச்சி நடந்தது. இதில், சுவாமி வழிபாட்டு நிகழ்ச்சிகள் முடித்து, ஆசிரியர் சிவகுமார் தலைமையில், சிறியவர்கள், பெரியவர்கள், விழா குழுவினர் என, 500க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்று வள்ளிக்கும்மியை அரங்கேற்றம் செய்தனர்.