கூடுவாஞ்சேரி சங்கோதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24மே 2025 12:05
கூடுவாஞ்சேரி; ஊரப்பாக்கம் அருகே, காரணைப்புதுச்சேரி கிராமத்தில் உள்ள சங்கோதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று விமரிசையாக நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் அடுத்த காரணைப்புதுச்சேரி ஊராட்சியில், பழமையான சங்கோதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடைபெற்றது.இந்நிலையில் வேத சிவ ஆகம சிற்ப சாஸ்திர முறைப்படி கோவிலில் புனரமைப்பு பணிகள் கடந்த ஆண்டு துவக்கப்பட்டு, கடந்த நான்கு நாட்களுக்கு முன் கும்பாபிஷேக யாக பூஜைகள் துவக்கப்பட்டன. நேற்று காலை 6:00 மணிக்கு 6-ம் கால பூஜையுடன், கோபூஜை உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு, கோவில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.