மூன்று லட்ச ரூபாய் பண அலங்காரத்தில் அருள்பாலித்த முத்துமாரியம்மன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24மே 2025 12:05
கோவை; கோவை கண்ணப்ப நகர் ஸ்ரீ முத்துமாரியம்மன் பெரிய கோவிலில் திருக்கல்யாண திருவிழாவை ஒட்டி, பண அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மனை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். கடந்த செவ்வாய்கிழமை கணபதி ஹோமம், கம்பம் நடுதல், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகத்துடன் விழா துவங்கியது. இன்று சங்கனூர் ஆதி கோனியம்மன் கோவிலிருந்து பால்குடம், தீர்த்தகுடம் ஊர்வலமாக எடுத்தவந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுமார் 3 லட்சம் ரூபாய் பணத்தினால் சிறப்பு அலங்காரம் அம்மனுக்கு செய்யப்பட்டு பக்தர்கள் வழிபட்டனர். வரும் 28 ம் தேதி புதன்கிழமை அம்மனுக்கு திருக்கல்யாணம் மற்றும் திருவீதி உலாவுடன் விழா நிறைவடைகிறது. பக்தர்களுக்கு தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது.