திருவாடானை; திருவாடானை அருகே பாண்டுகுடி லட்சுமிநாராயணபெருமாள், ஆலம்பாடி கரியமாணிக்க பெருமாள், தொண்டி உந்திபூத்த பெருமாள் கோயில்களில் நேற்று ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடந்தது. மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.