சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26மே 2025 03:05
சிதம்பரம்; சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவிலில் வைகாசி மாத திருவிழாவையொட்டி தேர்த் திருவிழா நடந்தது.
சிதம்பரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தில்லைக்காளியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா, கடந்த 17ம் தேதி காப்புக் கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து 18ம் தேதி சூரிய பிரபை வாகனம், 19ம் தேதி சந்திரபிரபை வானங்களில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. 21ம் தேதி தெருவடைச்சான், 23ம் தேதி கைலாய வாகனத்தில் வீதியுலா, 24ம் தேதி ரிஷப வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. முக்கிய விழாவாக நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளச் செய்து, தேரோட்டம் நடந்தது. வடக்கு வீதியில் துவங்கிய தேரோட்டம் கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி வழியாக மீண்டும் நிலையை வந்தடைந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நாளை 27ம் தேதி மஞ்சள் நீர் உற்சவம், முத்துப்பல்லக்கில் வீதியுலா, 29 ம் தேதி ஊஞ்சல் உற்சவத்துடன் விழா முடிவடைகிறது. ஏற்பாடுகளை கோவில் டடிரஸ்டி மற்றும் ஹிந்து அறநிலையத் துறையினர் செய்து வருகின்றனர்.