மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு அதிகாலை 6:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு வழிபாடு நடந்தது. காலை 11:00 மணிக்கு பாலசித்தர், வினாயகர், வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமிக்கு சிறப்பு பால் அபிஷேகம் நடந்தது. பகல் 12:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு வழிபாடு, மகா தீபாராதனை நடந்தது. மூலவர் தங்க கவசத்தில் அருள்பாலித்தார். பகல் 1:00 மணிக்கு கோவில் மண்டபத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை வள்ளி தெய்வானை சுப்பிரமணிய சுவாமிக்கு பால், சந்தனம், பன்னீர், தேன், இளநீர் உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் அபிஷேகமும், மகா தீபாரதனை நடந்தது. விழா ஏற்பாடுகளை மயிலம் ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.