Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உடலை விட்டு பிரியும் உயிர் எங்கே ... கிறிஸ்துமஸ் சிந்தனை 1: பிறருக்கு உதவும் குணம் வேண்டும்! கிறிஸ்துமஸ் சிந்தனை 1: பிறருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மீனாட்சி அம்மன் கோயிலில் டிச., 27ல் ஆருத்ரா தரிசனம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

15 டிச
2012
10:12

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், நாளை(டிச.,16) முதல், ஜன.,13 வரை, எண்ணெய் காப்பு உற்சவம், திருப்பள்ளிஎழுச்சி பூஜைகள், கோ ரதம் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. டிச., 27 ல், ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. இந்நாட்களில், கோயில் வெளிக்கோபுர கதவுகள், அதிகாலை 3.30 மணிக்கு திறக்கப்பட்டு, உச்சிக்கால பூஜை முடிந்து, மதியம் 12 மணிக்கு நடைசாத்தப்படும். மீண்டும், மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, இரவு 8.30 மணிக்கு பல்லக்கு புறப்பாடாகி, இரவு 9 மணிக்குள் நடைசாத்தப்படும். எண்ணெய் காப்பு உற்சவம், டிச.,19 முதல் 28 வரை, நடக்கிறது. இந்நாட்களில், மாலை 6 மணிக்கு, மீனாட்சி அம்மன் புதுமண்டபத்தில் எழுந்தருளி, தைலக்காப்பு மற்றும் தீபாராதனைக்கு பின், சித்திரை வீதிகளில் வலம் வருவார். டிச., 26 கோ ரதத்தில், அம்மன் எழுந்தருளி, ஆவணிமூல வீதிகளில் உலா வருவார். டிச., 27ல், கனகதண்டியலில் அம்மன் எழுந்தருளி, சித்திரை வீதிகளில் வருவார். டிச., 28 திருவாதிரை அன்று, பொன்னூஞ்சல் மண்டபத்திலிருந்து சுவாமி ரிஷப வாகனத்திலும், அம்மன் மர சிம்மாசனத்திலும், ஆடி வீதியில் வலம் வருவர். டிச.,27 இரவு முதல் அதிகாலை வரை, ஆருத்ரா தரிசனம், அபிஷேகம் நடக்கும். டிச., 28 காலை 7 மணிக்கு, பஞ்ச சபை நடராஜர், சிவகாமி அம்மனுடன் மாசி வீதிகளில் உலா வருவார். அபிஷேக பொருட்களான பால், தயிர், இளநீர், நெய், தேன், மஞ்சள்பொடி, திரவியப்பொடி, எண்ணெய், இதர அபிஷேகப் பொருட்களை, டிச., 27 மாலை முதல் கோயில் உள்துறை அலுவலகத்தில், பக்தர்கள் வழங்கலாம். ஜன.,5 அதிகாலை 5 மணிக்கு, அஷ்டமி சப்பரம் நடக்கிறது. டிச.,19 முதல் 28 வரை கோயில், உபயதாரர் சார்பில் உபய தங்கரத உலா, திருக்கல்யாணம் நடக்காது என, நிர்வாக அதிகாரி ஜெயராமன் தெரிவித்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று (அக்.11ல்) நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: பகவத் கீதை உலக நன்மையையும், மனித வாழ்வுக்கான வழிமுறைகளையும் எடுத்துக் கூறுகிறது. ... மேலும்
 
temple news
தூத்துக்குடி: குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கொளுத்தும் வெயிலிலும் பல்லாயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar