பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30மே 2025 05:05
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள மகா மாரியம்மன் திருக்கோவிலில் இரண்டாம் ஆண்டு விழா நடந்தது. பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா கடந்த, 2023 மே 24ம் தேதி நடந்தது. கோவிலின் இரண்டாம் ஆண்டு விழா இன்று கோவில் வளாகத்தில் நடந்தது. விழாவையொட்டி சிறப்பு ஹோமம், அபிஷேக ஆராதனை, சிறப்பு பூஜைகள் நடந்தன. மகா மாரியம்மன் வெள்ளி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.