Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெரியநாயக்கன்பாளையம் ... திருத்தணி மகிஷாசுரமர்த்தினி அம்மனுக்கு 62 கிலோ வெள்ளியில் கவசம் திருத்தணி மகிஷாசுரமர்த்தினி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வசந்த உத்சவம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் குதிரை வாகனத்தில் உலா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வசந்த உத்சவம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் குதிரை வாகனத்தில் உலா

பதிவு செய்த நாள்

31 மே
2025
10:05

காஞ்சிபுரம்;  காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், ஏழு நாட்கள் நடைபெறும் வசந்த உத்சவம் கடந்த 24ம் தேதி துவங்கியது. உத்சவத்தையொட்டி, தினமும் காலையில் கண்ணாடி அறையில் எழுந்தருளிய பெருமாளுக்கு விசேஷ பூஜை நடந்தது. மாலை 6:00 மணியளவில், கண்ணாடி அறையில் இருந்து, ஸ்ரீதேவி, பூதேவியருடன், வரதராஜ பெருமாள் கடந்த 6 நாட்களாக, தினமும் வெவ்வேறு அலங்காரத்தில், சன்னிதி தெருவில் உள்ள ஆஞ்சநேயர் சன்னிதியில் எழுந்தருளினார். அங்கிருந்து புறப்பாடாகி, கோவிலில் உள்ள அத்தி வரதர் மண்டபம் என, அழைக்கப்படும் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளிய பெருமாளுக்கு, திருவாராதனம் உள்ளிட்ட பூஜை நடந்தது. வசந்த உத்சவம் நிறைவு நாளான நேற்று காலை 11:00 மணிக்கு கண்ணாடி அறையில் இருந்து வரதராஜ பெருமாள் புறப்பாடாகி, வசந்த மண்டபம் வந்தடைந்தார். அங்கு சிறப்பு திருமஞ்சனமும், பக்தர்கள் பொது தரிசனமும் நடந்தது. மாலை 6:00 மணியளவில், குதிரை வாகனத்தில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள், நான்கு மாட வீதிகளில் உலா வந்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டனர். தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள அனந்தசரஸ் திருக்குளத்தில் ஸ்ரீசடாரி தீர்த்தவாரி உத்சவம் நடந்தது. உத்சவத்திற்கான ஏற்பாட்டை கோவில் உதவி ஆணையரும், நிர்வாக அறங்காவலருமான ராஜலட்சுமி, கோவில் பட்டாச்சாரியார்கள், பணியாளர்கள், உபயதாரர்கள் இணைந்து செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று முத்தங்கி சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar