விழுப்புரம்: விழுப்புரம் வைகுண்டவாசப் பெருமாள் கோவிலில் ஏகாதசி பகல் பத்து உற்சவம் துவங்கியது.வைகுண்டவாசப் பெருமாள் கோவிலில் ஏகாதசி உற்சவத்திற்காக, நேற்று முதல் (14ம் தேதி) பகல்பத்து உற்சவம் துவங்கி நடந்து வருகிறது.நேற்று துவங்கிய பகல் பத்து உற்சவத்தையொட்டி காலை 7 மணிக்கு துவங்கி 9 மணி வரை சுவாமிக்கு திருமஞ்சனம் நடந்தது.பகல் 11 மணிக்கு உற்சவர் வைகுண்டவாசப் பெருமாள் அலங்காரத்துடன் உட்பிரகாரத்தில் ஊர்வலம் வந்தார். பின் தீபாராதனை நடந்தது. பக்தர்கள் திரண்டு வழிபட்டனர்.தொடர்ந்து வரும் 23ம் தேதி வரை பகல் பத்து உற்சவமும், 24ம் தேதி வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பும் நடக்கிறது.இதன் பின் 25ம் தேதி முதல் ஜன., 3ம் தேதி வரை இராப்பத்து உற்சவமும் நடக்கிறது.