பதிவு செய்த நாள்
15
டிச
2012
10:12
சேலம்: சேலம், திருவாக்கவுண்டனூர் பைபாஸ் அருகே உள்ள, புனித மரியன்னை ஆலயத்தின், அர்ச்சிப்பு விழா, டிசம்பர், 17ம் தேதி நடக்கிறது.புனித மரியன்னை ஆலயத்தின் பங்கு தந்தை ஜோபி காச்சபிள்ளி கூறியதாவது:சேலம், திருவாக்கவுண்டனூர் பைபாஸ் அருகே, கேரளாவை சேர்ந்த மலபார் ஷீரோ கிறிஸ்துவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்களால், புனித மரியன்னை தேவாலயம் கட்டப்பட்டுள்ளது.தேவாலயத்தின், புனித அர்ச்சிப்பு விழா, டிசம்பர், 17ம் தேதி மாலை, 4.30 மணிக்கு நடக்கிறது. நிகழ்ச்சியில், பாலக்காடு மறைமாவட்ட ஆயர் ஜேக்கப் மன்தோடத்து, சேலம் மறைமாவட்ட ஆயர் சிங்கராயன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.மேலும், சேலம், கேரளாவை சேர்ந்த ஏராளமான கிறிஸ்துவ பாதிரியார்கள் உள்ளிட்டோர் திரளாக பங்கேற்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.சுபாஸ் செபாஸ்டியன், ஜோயி ஜோசப் ஆகியோர் உடனிருந்தனர்.