ராஜபாளையம்: ராஜபாளையம் வில்லாளி வீரன் ஐயப்ப பக்த பஜனை சேவா சங்கம் சார்பில், ஐயப்பவழிபாடு மூன்று நாள் நடந்தது. முதல்நாள், கணபதி ஹோமம் மற்றும் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக, அஷ்டாபிஷேகம், கன்னி பூஜை, பஜனை நடந்தது. கடைசி நாளான நேற்று, அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில், கருப்பணசுவாமி, ஐயப்பன் வீதி உலா, அன்னதானம் நடந்தது. ராஜபாளையம் மற்றும் சுற்றுகிராம ஐயப்ப பக்தர்கள் கலந்துகொண்டனர்.