விழுப்புரம்: விழுப்புரம் வைகுண்டவாசப் பெருமாள் கோவிலில் திருப்பதி சீனுவாச பெருமாள் அலங்காரத்தில் உற்சவர் அருள்பாலித்தார். விழுப்புரம் வைகுண்டவாசப் பெருமாள் கோவி லில் ஏகாதசி உற்சவத்தை முன்னிட்டு கடந்த 14ம் தேதி பகல் பத்து உற்சவம் துவங்கியது. நேற்று மூன்றாம் நாள் உற்சவத்தையொட்டி காலை 7 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து பகல் 12 மணிக்கு உற்சவர் வைகுண்டவாசப் பெருமாள், திருப்பதி சீனுவாச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர்.