அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் கோவிலில் ஆனி சோமவார பிரதோஷம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜூன் 2025 10:06
அச்சிறுபாக்கம்; அச்சிறுபாக்கத்தில், தொண்டை நாட்டு சிவ தலங்களில் ஒன்றான, இளங்கிளி அம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று, ஆனி மாத சோமவார பிரதோஷ வழிபாடு வெகு விமரிசையாக நடந்தது. இதில், நந்தியம் பெருமானுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், தேன் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. வெள்ளிக்கவசம் அணிவித்து, கோவில் சிவாச்சாரியார் வேத மந்திரங்கள் முழங்க, மஹா தீபாராதனை நடந்தது. இந்நிகழ்வில் பங்கேற்ற அனைத்து பக்தர்களுக்கும், பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.