பதிவு செய்த நாள்
01
ஜூலை
2025
04:07
சென்னை; திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆனி மாத நரசிம்ம பிரம்மோத்சவம், வரும் 4ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் இக்கோவிலில், யோக நரசிம்மர் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். உற்சவர் தெள்ளியசிங்கராக, ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியாருடன் சேவை சாதிக்கிறார்.
பிரம்மோத்சவ விழா கூடுதல் தகவல்கள்.. நாள் நிகழ்வு;
4ம் தேதி காலை 4:45 – 5:45 மணிகொடியேற்றம்
5ம் தேதி காலை சேஷ வாகன புறப்பாடு, இரவு சிம்ம வாகன புறப்பாடு
6ம் தேதி கருடசேவை உற்சவம், காலை 5:30 மணிக்கு கோபுர வாசல் தரிசனம், இரவு அம்ச வாகன புறப்பாடு
7ம் தேதி சூரிய சந்திர பிரபை புறப்பாடு
8ம் தேதி காலை பல்லக்கு நாச்சியார் திருக்கோலம், மாலை யோக நரசிம்மன் திருக்கோல புறப்பாடு, இரவு அனுமந்த வாகன புறப்பாடு
9ம் தேதி அதிகாலை 5:15 மணிக்கு சூர்ணாபிஷேகம், ஏகாந்த சேவை, இரவு யானை வாகன புறப்பாடு
10ம் தேதி தேர்திருவிழா காலை 7:00 மணி, இரவு 9:00 மணிக்கு நரசிம்மர் தோட்டத் திருமஞ்சனம்
11ம் தேதி காலை லட்சுமி நரசிம்ம திருக்கோல புறப்பாடு, இரவு குதிரை வாகன புறப்பாடு
12ம் தேதி காலை ஆளும் பல்லக்கு, தீர்த்தவாரி உற்சவம், இரவு கொடியிறக்கம்
13ம் தேதி வெட்டி வேர் தேர் புறப்பாடு இரவு 9:30 மணி.
14ம் தேதி முதல் 16ம் தேதி வரை விடையாற்றி உற்சவம்.