காஞ்சிபுரம்; பள்ளூர் ஊராட்சியில் உள்ள அம்மன் கோவில்களில் ஆனித்திருவிழா நடந்தது. ராணிப்பேட்டை மாவட்டம், பள்ளூர் ஊராட்சியில், மதுரா ஆலப்பாக்கம் கிராமத்தில் பொன்னியம்மன் மற்றும் முத்துாரியம்மன் கோவில்கள் உள்ளன. இங்கு, ஆனித்திருவிழா நடந்தது. இந்த திருவிழா முன்னிட்டு, நேற்று காலை, 7:00 மணிக்கு பொன்னியம்மன், முத்தமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதையடுத்து பகல், 11:00 மணிக்கு பொங்கலிடும் நிகழ்ச்சி மற்றும், 1:00 மணிக்கு கூழ்வார்த்தல் நடந்தது. தொடர்ந்து, 10:00 மணி அளவில் மலர் அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.