ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜூலை 2025 06:07
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று வெகு சிறப்புடன் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்
ஸ்ரீவில்லிபுத்துாரில் ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பெரிய மாரியம்மன் கோயிலில், பல ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேக விழா ஜூன் 29 அன்று விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது.
இன்று அதிகாலை மங்கல இசை, திருமுறை பாராயணம், வேத பாராயணம், நான்காம் கால யாகசாலை பூஜை, ஹோமம் தீபாரதனை முடிந்து கடம் புறப்பாடு நடந்தது. பின்னர் பெரிய மாரியம்மன் விமான கோபுரத்திற்கு புனித நீ ர் ஊற்றி, நாறும்புநாத பாலாஜி பட்டர் கும்பாபிஷேகத்தை நடத்தினார். மேலும் கன்னி விநாயகர் மற்றும் பரிவார மூர்த்தி கோபுரங்களுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவில் எம்.எல்.ஏ. மான்ராஜ், நகராட்சி தலைவர் ரவிக்கண்ணன், தக்கார் சக்கரையம்மாள் மற்றும் அறநிலையத்துறை உட்பட பல்வேறு அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் ஜோதிலட்சுமி தலைமையில் அறநிலைத்துறையினர் செய்திருந்தனர். டி.எஸ்.பி. ராஜா தலைமையில் 250க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.