Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆனித்திருமஞ்சனம்: பழநியில் ... ஆஷாட நவராத்திரி விழா; வாராகி அம்மனுக்கு பழங்களால் அலங்காரம் ஆஷாட நவராத்திரி விழா; வாராகி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குமரனின் திருப்பரங்குன்றம்.. குடைவரை கோயில்.. குதூகலமாய் தயாராகுது
எழுத்தின் அளவு:
குமரனின் திருப்பரங்குன்றம்.. குடைவரை கோயில்.. குதூகலமாய் தயாராகுது

பதிவு செய்த நாள்

03 ஜூலை
2025
10:07

அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் வெகுவிமசர்சையாக நடக்க உள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. 

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் கும்பாபிஷேக பணிகளின் ஒரு பகுதியாக பரிவார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்தும் பணி நேற்று துவங்கியது. உற்ஸவர் சன்னதியில் அஷ்டபந்தன மருந்து தயாரிக்க பயன்படுத்தப்பட்ட சுக்கான், கொம்பு அரக்கு, குங்குலியம், செந்துாரம், சொர்ண காவி, பஞ்சு, தேன்மிளகு, வெண்ணெய், மருந்து இடிக்க பயன்படுத்தப்படும் உரல், உலக்கை மருந்து சாத்துப்படி செய்வதற்கு பயன்படுத்தப்படும் சுத்தியல், இரும்பு பூச்சு கரண்டி ஆகியவை உற்ஸவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை முன்பு வைத்து சிவாச்சாரியார்கள் பூஜை செய்தனர். அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா மருந்து இடிக்கும் பணியை துவக்கி வைத்தார். அறங்காவலர்கள் சண்முகசுந்தரம், பொம்மதேவன், ராமையா, கோயில் துணை கமிஷனர் சூரிய நாராயணன், சரிபார்த்து அலுவலர் துணை கமிஷனர் பொன் சுவாமிநாதன்.

திருப்பரங்குன்றம் ஆய்வாளர் இளவரசி, கோயில் கண்காணிப்பாளர் ரஞ்சனி சத்தியசீலன் முன்னிலையில் மருந்து தயார் செய்து பாலாலயம் நடத்தப்பட்ட 120 பரிவார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்தும் பணி துவங்கியது. மற்ற பரிவார தெய்வங்கள், மூலவர்களுக்கு மருந்து சாத்தும் பணி தொடர்ந்து நடைபெறும். ஸ்தபதி முசிறி திருஞானசம்பந்தம் தலைமையில் 12 பேர் கொண்ட குழுவினர் மருந்து சாத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தி.மு.க., தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் பாலாஜி கலந்து கொண்டார்.

ஜொலிக்கும் ராஜகோபுரம்; கும்பாபிஷேகத்திற்காக யாகசாலை அமைக்கும் பணி நடக்கிறது. வர்ணங்கள் தீட்டப்பட்டு தயார் நிலையில் உள்ள ஏழு நிலை கொண்ட ராஜகோபுரம் ஜொலிக்கிறது.

பளபளக்கும் நிலைக்கதவுகள்; திருப்பரங்குன்றம் கோயில் மகா மண்டபத்தில் இருந்து மூலஸ்தானம் செல்லும் வழியில் உள்ள பித்தளை நிலை கதவுகளுக்கு பாலிஷ் போடப்பட்டுள்ளது.

இந்திரன் தாரை வார்த்தல்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மகா மண்டபத்தின் மேல் பகுதியில் முதல் முறையாக வரையப்பட்டுள்ள சுப்பிரமணிய சுவாமி தெய்வானை திருக்கல்யாணத்திற்காக இந்திரன் தாரை வார்த்து கொடுக்கும் காட்சி. கும்பாபிஷேகத்திற்காக யாகசாலை அமைக்கும் பணி நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குன்றத்துார்; சோமங்கலத்தில் உள்ள சுந்தரராஜ பெருமாள் கோவிலில், இன்று கருட சேவை உற்சவம் விமரிசையாக ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நான்காம் ... மேலும்
 
temple news
திருபுவனை; சன்னியாசிக்குப்பம் சப்த மாதா கோவிலில் வாராகி அம்மன் ஆஷாட நவராத்திரி விழாவின் 7வது நாளான ... மேலும்
 
temple news
திருப்புத்துார்; திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜர் ... மேலும்
 
temple news
ஜம்மு: புனித அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் முதல் குழு புறப்பட்டு சென்றது. பயங்கரவாதிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar