திருபுவனை; சன்னியாசிக்குப்பம் சப்த மாதா கோவிலில் வாராகி அம்மன் ஆஷாட நவராத்திரி விழாவின் 7வது நாளான நேற்று பழங்கள் அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருபுவனை அடுத்த சன்னியாசிக்குப்பம் சப்த மாதா கோவில் ஆஷாட நவராத்திரி விழா கடந்த 26ம் தேதி தொடங்கி நடந்த வருகிறது. தினசரி வாராகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். 27ம் தேதி குங்குமத்தால் அலங்காரம் செய்யப்பட்டு ராஜ அலங்காரத்திலும், 28ம் தேதி சந்தன காப்பு அலங்காரத்திலும், 29ம் தேதி, தேங்காய் பூ சிறப்பு அலங்காரத்திலும் அருள்பாலித்தார். 7வது நாளான நேற்று பழங்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் வாராகி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஆஷாட நவராத்திரி விழா வரும் 5ம் தேதி வரை நடக்கிறது.