பாலாஜி கோயில் கும்பாபிஷேகம்; சிறப்பு அலங்காரத்தில் சுவாமி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜூலை 2025 10:07
விருதுநகர்; விருதுநகர் வாலசுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் அமைந்துள்ள பாலாஜி கோயிலில் ஜூன் 30ல் யாக சாலை பூஜைகளுடன் கும்பாபிஷேகம் துவங்கியது. அனைத்து சுவாமிகளுக்கும் யந்திரஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் வைபவம் நடந்தது. காலை 10:00 மணிக்கு கும்பம் எழுந்தருளியது. 11:30 மணிக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. அலங்காரத்தில் அம்பாளுடன் சுவாமி அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.