புதுக்குடியில் எட்டு ஆண்டாக பூட்டியிருக்கும் கோயிலை திறக்க முடிவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜூலை 2025 03:07
தொண்டி; தொண்டி புதுக்குடியில் எட்டு ஆண்டுகளாக பூட்டியிருக்கும் சந்தனமாரியம்மன் கோயிலை திறக்க பக்தர்கள் வலியுறுத்தியதால் திறப்பதற்கான முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தொண்டி புதுக்குடி கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ளது சந்தனமாரியம்மன் கோயில். 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இக்கோயிலில் ஆடியில் திருவிழா நடைபெறும். வரவு செலவு பார்ப்பது சம்பந்தமாக இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்டது. வருவாய்த்துறையினர் சார்பில் சமரச முயற்சி செய்தும் பயனில்லாததால் கோயில் பூட்டபட்டு திருவாடானை தாலுகா அலுவலகத்தில் சாவி ஒப்படைக்கப்பட்டது. தற்போது அக்கிராமத்தை சேர்ந்த சிலர் கோயிலை திறக்க விருப்பம் தெரிவித்ததால் அதிகாரிகள் கோயிலை திறக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து திருவாடானை தாசில்தார் ஆண்டி கூறியதாவது: தொண்டி புதுக்குடியில் உள்ள சந்தனமாரியம்மன் கோயிலில் இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்டதால் பூட்டப்பட்டது. தற்போது அக்கோயிலை திறக்க சிலர் விருப்பம் தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எனவே கோயிலை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.