திருப்பூர்: நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில், ஆனி தேர்த்திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. புதிய தேர்கள் வடிவமைத்து, நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், ஆனி மாதம் தேர்த்திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று காலை, 10:00 மணிக்கு, சந்திரசேகரர்– மனோன்மணி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள, சிவாச்சார்யார்கள், வேத மந்திரங்கள் முழங்க, கொடியேற்றி தீபாராதனை செய்தனர். மாலை, 7:00 மணிக்கு, சூரியசந்திர பிரபை வாகனத்தில், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சோமாஸ்கந்தர், திருவீதியுலா வந்து பக்தர்குளுக்கு அருள்பாலித்தனர். வரும், 8ம் தேதி மாலை பஞ்சமூர்த்திகள் புறப்பாடும், 9ம் தேதி திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது; 10ம் தேதி காலை, விநாயகர் மற்றும் சோமாஸ்கந்தர் சிறப்பு அலங்காரத்துடன் தேரில் இருந்து அருள்பாலிக்க உள்ளனர்; மாலை, 4:00 மணிக்கு, தேரோட்டம் நடைபெறுகிறது.