திருச்செந்தூர் கும்பாபிஷேகத்தில் வானில் வட்டமிட்டு ராஜகோபுரத்தில் அமர்ந்த கருடன்; பக்தர்கள் மெய்சிலிர்ப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜூலை 2025 01:07
துாத்துக்குடி: முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் இன்று (ஜூலை 7) காலை 6.22 மணியளவில் மஹாகும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளனர். பல்வேறு சிறப்புகளுக்கு பின் இன்று காலை 6:15 முதல், 6:50 மணிக்குள் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. குடமுழுக்கு விழா நடைபெற்றபோது, வானில் கழுகு ஒன்று வட்டமிட்டுக் கொண்டு கோயிலின் ராஜகோபுரத்தின் மீது வந்து அமர்ந்தது. இது அங்கிருந்த பக்தர்களை மிகவும் உற்சாகப்படுத்தியது. முருகனே வந்ததாக பரவசமடைந்தனர். கோவில் வளாகத்திலும், கோவிலை ஒட்டி கடற்கரையிலும் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் இதை தரிசித்தனர். விழாவில் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற பக்தர்களின் கோஷம் விண்ணை பிளந்தது. மேலும் இது ஒரு தெய்வீக நிகழ்வாக கருதப்படுகிறது. இந்த நிகழ்வின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.