திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் பெருமாள் நாயக்கர் வீதியில் அமைந்துள்ள சுதர்சன வீர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. திருக்கோவிலூர் பெருமாள் நாயக்கர் வீதியில், வேணுகோபால பெருமாள், சுதர்சன வீர ஆஞ்சநேயர், விஷ்ணு துர்க்கை, ஸ்ரீ விநாயகர் மற்றும் நவக்கிரகங்கள் அடங்கிய வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. புனரமைக்கப்பட்டு இன்று மகா கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக கடந்த 5ம் தேதி யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று காலை 7:00 மணிக்கு புண்யாகம், கோபூஜை, அக்னி ஆராதனம், கும்ப ஆராதனம், பிரதான ஹோமங்கள், மகா பூர்ணாகுதி, யாத்ரா தானம், கலசம் புறப்பாடாகி விமானம் பரிவார மூர்த்திக்கு புனித நீர் ஊற்றி, மகா கும்பாபிஷேகம் நடந்தது. ஜீயர் தேகளீச ராமானுஜாச்சாரியார் சுவாமிகள் தலைமையில் நடந்த விழாவில் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.