காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு ரூ.4,10,000 மதிப்புள்ள வெள்ளி பொருள் காணிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜூலை 2025 02:07
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு ஸ்ரீ சைதன்ய கல்வி நிறுவனங்களின் தலைவர் பொப்பன. ஜான்சி லக்ஷ்மிபாய் மற்றும் இயக்குனர் சீமா ஆகியோர் இன்று ரூ.4,10,000 மதிப்புள்ள வெள்ளி ஆரத்தி செட்டை வழங்கினர். இவை கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ மேதா தட்சிணாமூர்த்திக்கு நடக்கும் பூஜைகளில் பயன்படுத்த கோயில் செயல் அதிகாரி டி.பாபிரெட்டி யிடம் வழங்கினார்கள். முன்னதாக இவர்களுக்கு கோயிலில் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்ததோடு சிறப்பு தரிசன ஏற்பாடுகளையும் செய்தனர். கோயில் வளாகத்தில் உள்ள தக்ஷிணாமூர்த்தி சன்னதி அருகில் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு கோயில் தீர்த்தப் பிரசாதங்களையும் சாமி படத்தையும் வழங்கினர்.